பத்திரிகை செய்தி குறிப்பு
பத்திரிகை செய்தி குறிப்பு
தமிழகத்தில் சிக்-குன்-குன்யா நோய் பரவி அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டதும் அதன்பின் அரசு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தியதும் தெரிந்த செய்திகளே
தமிழக அரசின் பொது சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், மருத்துவர்களும், இதர களப்பணியாளர்களும் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு சில சுகாதார ஆய்வாளர்கள் (Male Multipurpose Health Worker is called as Health Inspector in Tamil Nadu) இப்பணியை ஒழுங்காக செய்வதில்லை.
பணியை ஒழுங்காக செய்யாதது மற்றுமன்றி, கீழ்க்கண்ட கருத்துக்களையும் பொது ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கிறார்கள்
• “கொசு மருந்து ஊற்றும் பணி சுகாதார ஆய்வாளர்களின் வேலையே கிடையாது”
• “ஒவ்வொரு HSCக்கும் ஒரு மஸ்தூர் நியமிக்கப்படவேண்டும்”
• “எனக்கு கீழ் மஸ்தூர் ஒருவரை நியமித்தால்தான் இப்பணியில் ஈடுபடுவேன். இல்லையென்றால் செய்ய மாட்டேன்”
• “முடிவைத்தானேந்தல் மருத்துவ அதிகாரி பொதுமக்களிடம் மருந்து ஊற்றினோமா என்று நேரடியாக விசாரிக்கிறார்”
• “எங்களை யாரும் மேற்பார்வையிடக்கூடாது”
• “நாங்கள் வேலை செய்தோமா என்று மக்களிடம் விசாரிக்க கூடாது”
• “நாங்கள் ஐந்து மணி வரை ஏரியாவில் இருந்தோமா என்று விசாரிக்கக் கூடாது”
• “ஐந்து மணி வரை எங்களை வேலை செய்ய சொன்னால் வெறும் ஐந்து வீட்டிற்கு மட்டும் ஊற்றுவோம் பரவாயில்லையா?”
இது குறித்து விளக்கம் கேட்ட மருத்துவ அதிகாரிக்கு மிரட்டல் விடப்பட்டு, அவர் அலுவலகத்தின் உள்ளேயே தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டுள்ளார்.
மேலும் சமுகத்தில் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒரு மருத்துவரை கேவலப்படுத்தும் வகையில் தட்டி போர்டுகளை (2 Boards – one opposite to AVM Hospital and the other at the entrance to the collectorate) வைத்துள்ளனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூனாக மதிக்கப்படும் தாங்கள் இது குறித்து தங்களின் நிருபர்களின் மூலமும், இதர வழியாகவும் விசாரித்து, அவசர காலத்தில் கூட தங்களின் வேலையை செய்யாமல் மேலதிகாரியை மிரட்டும் இப்போக்கினை மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்லும்மாறு கேட்டுக் கொள்கிறோம்
மாவட்ட நிர்வாகிகள்
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம்,
தூத்துக்குடி மாவட்டம்
No comments:
Post a Comment