Wednesday, October 25, 2006

பத்திரிகை செய்தி குறிப்பு

பத்திரிகை செய்தி குறிப்பு

தமிழகத்தில் சிக்-குன்-குன்யா நோய் பரவி அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டதும் அதன்பின் அரசு கொசு ஒழிப்பு பணிகளில் தீவிர கவனம் செலுத்தியதும் தெரிந்த செய்திகளே

தமிழக அரசின் பொது சுகாதார துறையைச் சேர்ந்த அதிகாரிகளும், மருத்துவர்களும், இதர களப்பணியாளர்களும் இத்திட்டத்தில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு சில சுகாதார ஆய்வாளர்கள் (Male Multipurpose Health Worker is called as Health Inspector in Tamil Nadu) இப்பணியை ஒழுங்காக செய்வதில்லை.

பணியை ஒழுங்காக செய்யாதது மற்றுமன்றி, கீழ்க்கண்ட கருத்துக்களையும் பொது ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கிறார்கள்

• “கொசு மருந்து ஊற்றும் பணி சுகாதார ஆய்வாளர்களின் வேலையே கிடையாது”
• “ஒவ்வொரு HSCக்கும் ஒரு மஸ்தூர் நியமிக்கப்படவேண்டும்”
• “எனக்கு கீழ் மஸ்தூர் ஒருவரை நியமித்தால்தான் இப்பணியில் ஈடுபடுவேன். இல்லையென்றால் செய்ய மாட்டேன்”
• “முடிவைத்தானேந்தல் மருத்துவ அதிகாரி பொதுமக்களிடம் மருந்து ஊற்றினோமா என்று நேரடியாக விசாரிக்கிறார்”
• “எங்களை யாரும் மேற்பார்வையிடக்கூடாது”
• “நாங்கள் வேலை செய்தோமா என்று மக்களிடம் விசாரிக்க கூடாது”
• “நாங்கள் ஐந்து மணி வரை ஏரியாவில் இருந்தோமா என்று விசாரிக்கக் கூடாது”
• “ஐந்து மணி வரை எங்களை வேலை செய்ய சொன்னால் வெறும் ஐந்து வீட்டிற்கு மட்டும் ஊற்றுவோம் பரவாயில்லையா?”

இது குறித்து விளக்கம் கேட்ட மருத்துவ அதிகாரிக்கு மிரட்டல் விடப்பட்டு, அவர் அலுவலகத்தின் உள்ளேயே தகாத வார்த்தைகளால் திட்டப்பட்டுள்ளார்.

மேலும் சமுகத்தில் ஒரு உயர் பதவியில் இருக்கும் ஒரு மருத்துவரை கேவலப்படுத்தும் வகையில் தட்டி போர்டுகளை (2 Boards – one opposite to AVM Hospital and the other at the entrance to the collectorate) வைத்துள்ளனர்.
ஜனநாயகத்தின் நான்காவது தூனாக மதிக்கப்படும் தாங்கள் இது குறித்து தங்களின் நிருபர்களின் மூலமும், இதர வழியாகவும் விசாரித்து, அவசர காலத்தில் கூட தங்களின் வேலையை செய்யாமல் மேலதிகாரியை மிரட்டும் இப்போக்கினை மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்லும்மாறு கேட்டுக் கொள்கிறோம்

மாவட்ட நிர்வாகிகள்
தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம்,
தூத்துக்குடி மாவட்டம்

Friday, October 6, 2006

Block Medical Officers Letter

அனுப்புனர்

வட்டார மருத்துவ அலுவலர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
புதுக்கோட்டை பெறுனர்

துணை இயக்குனர் - சுகாதார பணிகள்
தூத்துக்குடி

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்:பொது சுகாதாரம் - ஆப்பரேசன் சிக்குன் குனியா (Operation Chickungunya)- வட்டார அளவிலான ஆய்வுக்கூட்டம் - சுகாதார ஆய்வாளர்களின் கருத்துக்கள் - தகாத வார்த்தைகளை (unparliamentary and filthy words) அலுவலக ஆய்வுக்கூட்டத்தில் உபயோகித்தல் - மருத்துவ அலுவலரை திட்டுதல் மற்றும் மிரட்டுதல் - கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் தங்களுக்கு தெரியப்படுத்துதல் - அறிக்கை பணிவுடன் சமர்ப்பித்தல் - தொடர்பாக

பார்வை: வட்டார அளவில் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மற்றும் சிக்-குன்-குனியா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்தும் படி தூத்துக்குடி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அவர்களின் உத்தரவு

பார்வையில் கண்ட தங்களின் உத்தரவின்படி 06/10/2006 மாலை இவ்வலுவலகத்தில் முத்துலட்சுமி ரெட்டி திட்டம் மற்றும் சிக்-குன்-குனியா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கீழ்க்கண்டவர்கள் கலந்து கொண்டனர்.
1. திருமதி. பட்டுக்கனி – DMCHO
2. வட்டார மருத்துவ அலுவலர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் புதுக்கோட்டை
3. மரு. பிரதீப் பிரேம் குமார் - முடிவைத்தானேந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்
4. முள்ளக்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்
5. மாப்பிள்ளையூரனி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்
6. வட்டார சுகாதார மேற்பார்வையாளர்
7. சமுதாய சுகாதார செவிலியர்
8. பகுதி சுகாதார செவிலியர்
9. சுகாதார ஆய்வாளர்கள்
10. கிராம சுகாதார செவிலியர்கள்

முதலில் கிராம சுகாதார செவிலியர்களிடம் இத்திட்டங்களை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் சுகாதார ஆய்வாளர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அவ்வாய்வு குறித்த விரிவான அறிக்கை வருமாறு.
திரு.பீட்டர் பர்னபாஸ், திரு. ஆனந்தன், திரு. இசக்கி ஆகிய சுகாதார ஆய்வாளர்கள் கீழ்க்கண்ட கருத்துக்களை தெரிவித்தனர்.

  • “கொசு மருந்து ஊற்றும் பணி சுகாதார ஆய்வாளர்களின் வேலையே கிடையாது”
  • “ஒவ்வொரு HSCக்கும் ஒரு மஸ்தூர் நியமிக்கப்படவேண்டும்”
  • “எனக்கு கீழ் மஸ்தூர் ஒருவரை நியமித்தால்தான் இப்பணியில் ஈடுபடுவேன். இல்லையென்றால் செய்ய மாட்டேன்”
  • “முடிவைத்தானேந்தல் மருத்துவ அதிகாரி பொதுமக்களிடம் மருந்து ஊற்றினோமா என்று நேரடியாக விசாரிக்கிறார்”
  • “எங்களை யாரும் மேற்பார்வையிடக்கூடாது”
  • “நாங்கள் வேலை செய்தோமா என்று மக்களிடம் விசாரிக்க கூடாது”
  • “நாங்கள் ஐந்து மணி வரை ஏரியாவில் இருந்தோமா என்று விசாரிக்கக் கூடாது”
  • “ஐந்து மணி வரை எங்களை வேலை செய்ய சொன்னால் வெறும் ஐந்து வீட்டிற்கு மட்டும் ஊற்றுவோம் பரவாயில்லையா?”

இவ்வாறு கருத்துகள் கூறப்பட்டபின் முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலர் ஈ.பிரதீப் பிரேம் குமார் கீழ்க்கண்டவாறு கூறினார் "நீங்கள் என் வீட்டிற்கோ மேடம் (வட்டார மருத்துவ அலுவலர்) வீட்டிற்கோ வேலை செய்யவில்லை. அரசாங்கத்தால் உங்களுக்கு நியமிக்கப்பட்ட வேலையை செய்கிறீர்கள். செய்ய முடியுமா ? முடியாதா ? முடியாது என்றால் எழுத்துமூலம் தெரிவியுங்கள். அதன் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பேன்

அதன் பின் முள்ளக்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் வரும் ஸ்பிக் நகர் துணை சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் திரு.மி.டெரன்ஸ் எழுந்து
"நீ யாருவே எங்களை கேட்க #$#$#$ (அச்சில் ஏற்ற முடியாத தகாத சொல்)... வெளிய வாவே... இந்த ஏரியாவ விட்டு எப்படி தாண்டுவ... எங்கவே போவே... தூத்துக்குடிக்கு எப்படி வருவன்னு பாக்கன்...

இது நடந்தபின் சில சுகாதார ஆய்வாளர்கள் எழுந்து மரு.பிரதீப்பை மிகத்தரக்குறைவான வார்த்தைகளால் ஏக வசனத்தில் திட்டி அவரை நோக்கி ஆவேசமாக ஓடி வந்தனர்.
நானும் வட்டார சுகாதார மேற்பார்வையாள்ர் திரு.P.T.நாராயணனும் "எல்லோரும் அமைதியாக பேசுங்கள்" என்றோம். உடன் முடிவைத்தானேந்தல் சுகாதார ஆய்வாளர் திரு. செல்வராமன் வட்டார சுகாதார மேற்பார்வையாளரை (BHS - சுகாதார ஆய்வாளரது மேற்பார்வையாளர்) நோக்கி "நீ எத்தன வீட்டிற்கு ஊத்துன, நீ யாரு என்ன கேட்க" என்று அவரை நோக்கி பாய்ந்தார். அவரை முள்ளக்காடு சுகாதார ஆய்வாளர் திரு பெரியசாமி தடுத்தார்.

சமுதாய சுகாதார செவிலியர் திருமதி பிரேமா முடிவைத்தானேந்தல் மருத்துவ அலுவலரிடம் "சார் நிலைமை சரியில்லை, please, வெளியே சென்றுவிடுங்கள்" என்று கூறினார். முள்ளக்காடு மருத்துவ அலுவலர் மரு.பிரதீப்பை பாதுகாப்பாக வெளியே கூட்டி சென்றார்.

அதன் பின் சுகாதார ஆய்வாளர்களில் ஒரு சிலர் எழுந்து கத்திகொண்டு இருந்தனர். ஒரு சிலர் “மருந்து ஊற்ற முடியாது, வேனும்ணா டிஸ்மிஸ் பண்ணுங்க” என்றனர். ஆய்வுக்கூடத்தை விட்டு வெளியே சென்றனர்.

சுகாதார ஆய்வாளர்கள்
1. எழுந்து நின்று கத்தியதாலும்
2. மருத்துவ அலுவலர் ஒருவரை நோக்கி தகாத வார்த்தைகளால் திட்டியதாலும்
3. மருத்துவ அலுவலர் ஒருவரை மிரட்டியதாலும்
4. அவர்களின் மேற்பார்வையாளர் (BHS) நோக்கி உடலால் தீங்கிழைக்கும் நோக்கில் முன்னேறியதாலும்
5. ஒரு சிலர் ஆய்வு நடத்தும் அதிகாரியின் அனுமதியின்றி வெளியே சென்றதாலும்
6. “எங்காளால் இப்பணியை இனிமேல் செய்ய முடியாது” போன்ற அரசு விதிகள் மற்றும் அரசின் கொள்கை முடிவுகளை மதியாமல் பேசியதாலும்
7. மேலதிகாரியை மதியாமல் பேசியதாலும்
கூட்டத்தை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. எனவே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது

இவ்வறிக்கையினை உங்களின் பார்வைக்கு பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்

இதனால் சிக்-குன்-குனியா பணிகள் குறித்து ஆண் களப்பணியாளர்களை ஆய்வு செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது

எனவே தாங்கள் தயை கூர்ந்து வருங்காலங்களில் இப்பணிகள் குறித்து மருத்துவ அலுவலர்கள் முறையான மேற்பார்வையும் ஆய்வும் நடத்துவதற்குரிய சூழ்நிலையை உருவாக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.




வட்டார மருத்துவ அலுவலர்
அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
புதுக்கோட்டை

TNGDA Representation

Dated 06/10/2006

From

Tamil Nadu Government Doctors Association

Thoothukudi

To

The Director of Public Health and Preventive Medicine

Chennai

Respected Sir,

Sub : Epidemic - Operation Chickungunya -Anti Larval Work - Field Supervision by Medical Officers – Review Meeting at Pudukottai on 06/10/2006 – Medical Officer of PHC Mudivaithanenthal verbally abused by the Health Inspector – One Health Inspector Mr.M.Dharance of Mullakkadu Primary Health Centre threatened the Medical Officer for field supervision – Complaint submitted –request to take stern action against the individuals – to protect medical officers to carry out government policies – reg

Ref :

1. Tamil Nadu Govt Servant’s Conduct Rules (1973) Rule 20 Sub Rule 1, 2, 3(iv)

Permit us to submit this memorandum representing all the medical officers working in Operation Chickungunya.

On a review meeting held at Pudukottai Block Primary Health Centre, chaired by the Block Medical Officer, Dr.Caroline, the medical officer of PHC Mudivaithanenthal, Dr.E.Pradeep Prem Kumar was verbally abused and threatened in front of

  1. The Block Medical Officer
  2. MO PHC Mullakkadu
  3. MO PHC Mapillaiurani
  4. Mr.P.T.Narayanan BHS
  5. Mrs.Prema CHN
  6. Other Health Inspectors of this PHC

The Health Inspectors has told comments like

  • கொசு மருந்து ஊற்றும் பணி சுகாதார ஆய்வாளர்களின் வேலையே கிடையாது (AL work is not the work of Health Inspector).
  • ஒவ்வொரு HSCக்கும் ஒரு மஸ்தூர் நியமிக்கப்படவேண்டும் (A mazdoor should be nominated for each Health Sub Centre).
  • எனக்கு கீழ் மஸ்தூர் ஒருவரை நியமித்தால்தான் இப்பணியில் ஈடுபடுவேன். இல்லையென்றால் செய்ய மாட்டேன் (I will carry out AL (Anti Larval) work only if a mazdoor is nominated under me.)
  • முடிவைத்தானேந்தல் மருத்துவ அதிகாரி பொதுமக்களிடம் மருந்து ஊற்றினோமா என்று நேரடியாக விசாரிக்கிறார் (MO PHC (Medical Officer Primary Health Centre) Mudivaithanenthal is enquiring the public as to whether we have carried out AL Work)
  • எங்களை யாரும் மேற்பார்வையிடக்கூடாது(We should not be supervised)
  • நாங்கள் வேலை செய்தோமா என்று மக்களிடம் விசாரிக்க கூடாது(The medical officer should not enquire from the public whether we have worked)
  • நாங்கள் ஐந்து மணி வரை ஏரியாவில் இருந்தோமா என்று விசாரிக்கக் கூடாது (The MO should not enquire whether we had worked till 5 PM )
  • ஐந்து மணி வரை எங்களை வேலை செய்ய சொன்னால் வெறும் ஐந்து வீட்டிற்கு மட்டும் ஊற்றுவோம் பரவாயில்லையா?” (If you insist that we work till 5 PM then we will carry out AL work for 5 houses only)

When such comments were told by the health inspectors, Dr.Pradeep has asked them to give it in writing. It is reported that one Health Inspector of Mullakkadu PHC, Mr.N.Dharance had told

நீ யாருவே எங்களை கேட்க #$#$#$ (அச்சில் ஏற்ற முடியாத தகாத சொல்)... வெளிய வாவே... இந்த ஏரியாவ விட்டு எப்படி தாண்டுவ... எங்கவே போவே... தூத்துக்குடிக்கு எப்படி வருவன்னு பாக்கன்....” (“Who are you to ask us $%$^ (unparliamentary filthy word) Come out … I will see how you come out of this area. Where will you go. I will see how you can come to Thoothukudi”)

This is highly regrettable and condemnable. The Health Inspectors have told that they will not obey the Government Orders and have acted against the government policy and also against public Health. A subordinate staff has threatened the medical officer right inside the Primary Health Centre in presence of Block Medical Officer, other medical officers, and other Health Inspectors.

If such a behavior is allowed scot-free, then we are afraid that no medical officer can conduct a review of staff in future.


S/d Executive Committee Member

(Working under DPH and representing TNGDA)


Copy submitted to

  1. Special Cell - Honorable Chief Minister of Tamil Nadu
  2. Chief Secretary, Government of Tamil Nadu
  3. Honorable Minister of Health and Family Welfare, Secretariat, Chennai
  4. Secretary, Health and Family Welfare, Secretariat, Chennai
  5. Joint Director of Public Health and Preventive Medicine (NVDCP), Chennai
  6. District Collector, Thoothukudi
  7. DDHS, Thoothukkudi